வியாழன், 29 ஜூலை, 2010

மத உணர்வுகளை அவமதித்தலும் தண்டனையும் .

''முன்னறிதல்'' , ''விருப்பம்'' இரண்டும் சேர்ந்து கருத்து ஆகிறது .
ஒருவர் தான் செய்யும் செய்கையிலிருந்து இயல்பாக எழக்கூடிய விளைவுகளை அறிவர் .ஒரு செயலின் விளைவை முன்னறிந்து ,அந்த விளைவை விரும்பி ,அவ்விருப்பத்தால் உந்தப்பட்டு செய்கையைச் செய்வது ''கருதியசெயல் '' எனப்படுகிறது .

கருதியசெயல் எதை அடையவேண்டும் என்று செய்யப்படுகிறதோ அதை நோக்கம் (MOTIVE) என்கிறோம் .நல்ல நோக்கத்துடன் செய்த குற்றமனச்செயல் ,நோக்கம் நல்லது என்பதற்காக சட்டம் மன்னிப்பதில்லை .
சில நேர்வுகளில் குற்றமனத்தை கருத்தில் கொள்ளாமலும் குற்றவாளியின் குற்றச்செயலை தண்டிக்கலாம்.
சுருக்கமாக'' குற்றமனத்துடன் புரிந்த முடிவடைந்த கருதியசெயல் குற்றம் ''என சட்டம் கூறுகிறது .

நம்ம இந்திய தண்டனைச்சட்டம் குற்றமனம் என்ற பதத்தை அப்படியே பயன்படுத்துவதில்லை.ஆனால் கருத்துடன், தன்னிச்சையாக, மோசடியாக, நேர்மையற்ற, இழிந்த,குரோதமான,வேண்டுமென்றே ...என்ற சொற்களை குற்றமனத்தினை குறிப்பிடும் வண்ணம் கூறுகிறது .

இந்தியாவிற்குள் குற்றம் செய்யும் ஒவ்வொருவரும் இந்திய தண்டனைச்சட்டத்தின் படி தண்டிக்கப்படுவர் . மற்றும் சில சட்டங்களில் வரும் பிரிவுகளின் படி இந்தியாவிற்கு வெளியிலிருந்து்ம் செய்யும் செயல்களுக்கும் தண்டிக்கப்படுவர்.இதில் இந்திய இறையாண்மைக்கு எதிரான செய்யும் தவறான செயல்கள் ,இணையதளத்தின் மூலம் செய்யும் தவறான செயல்கள் ஆகிய குற்றங்கள் அடங்கும் .

சட்டம் தெரியாது என்பது ஒரு எதிர்வாதமாகாது .அதனாற்காக மன்னித்து சட்டம் தண்டிக்காமல் இருப்பதில்லை .

மத உணர்வுகளை அவமதித்தல் ,அவதூறு,அவமதிப்பு,தொந்தரவு செய்தல்,பெண்ணை அவமதித்தல் ஆகியவற்றிற்கான தண்டனைகள் பற்றி சட்டம் கூறுவதை பார்க்கலாம் .
நமது அரசியல் சாசனம் சரத்து 25 முதல் 28 வரை கொடுக்கப்பட்ட உரிமைகள் வழிபாட்டுச்சுதந்திரம் ஆகும் .அதன் படி தான் விரும்பிய மதத்தை சர்வசுதந்திரமாக பின்பற்ற உரிமை உண்டு .ஒருவருக்கு மற்றவர் மதத்தை பழிக்க உரிமை கிடையாது .அவ்வாறு பழித்தல் ,அவமதித்தல் இந்திய தண்டனைச்சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் .




கருத்துரிமையும் தண்டனையும் -2 .
தொடரும் ...





.




.



.

Download As PDF

புதன், 28 ஜூலை, 2010

கருத்துரிமையும் தண்டனையும் .

இப்ப அதிகமாக கதைக்கும் சொல்லாக இருக்கிறது கருத்துரிமை என்பது .
ஆதலால் ,அதைப்பத்தி தெரிந்துகொள்வது நல்லது எனப்பட்டதால் சில விசயங்களை இங்கு .

இது என் கருத்து ,நான் நினைக்கிறேன் ,இது தான் என்னும் வரை எந்த பிரச்சனையும் இல்ல .அது அவர் கருத்து அவருடன் அவ்வளவே அம்மட்டே.அது எத்தகைய கருத்தாக இருந்தாலும் அதற்காக யாரையும் எதனாலும் எதுவும் என்னவும் செய்யமுடியாது .சுருக்கமா சொல்லனுமுனா தண்டிக்கவே
முடியாது .

கருத்துரிமை ,கருத்துரிமைனு கதைக்கக்காரணம் தண்டிக்கப்படுவதால் .அதனால் அதைப்பத்தி முதலில் பார்த்தேன் .கொஞ்சம் கஷ்டம் தான் .

முதலில் குற்றம்னா என்னானு பாத்தா
''பொது உரிமைகளையும் கடமைகளையும் மீறும் செயல் குற்றமாகும் ''
அப்படினா குற்றம் என்பது செயல் ஒன்றை குறிக்கிறது .ஆனால் அப்படிப்பட்ட ஒருசெயலை செய்தவர் அதற்காக குற்றவாளியாகமாட்டார் .அச்செயல் குற்றமனத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே குற்றம் என்றும் ,அதனை செய்தவரை குற்றவாளி என்றும் சட்டம் கூறுகிறது .


குற்றமனத்திற்கு அடிப்படை கருத்து .



தொடரும் ...

.

.

.

Download As PDF

ஞாயிறு, 18 ஜூலை, 2010

முலையிரண்டும் இல்லாதாள்

.



முலையிரண்டும் இல்லாதாள் .
முலையை குறிப்பாக குறிப்பிடுவதன் காரணம் என்ன?.

முலையில்லாதவள் என சொல்வதற்கு என்ன இடர் ?.
ஏன் இரண்டையும் சொல்லவேண்டும் ?.
ஆணுக்கு பொண்ணை உதாரணம் சொல்வது போல உள்ளதே
அப்படித்தானா இல்லை ஆணாதிக்க சிந்தனையா ?.
இங்கு முலையை குறிப்பிடுவதன் குறிப்பான நோக்கம் என்ன ?.
என பற்பல சிந்தனைகளை என்னுள் ஏற்படுத்திய குறள்


'கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.'


தாய்ப்பால் எவ்வளவு சிறந்தது என நாம் அனைவருக்கும் தெரியும்.முலை வழி தாய் தன் மகவுக்கு தனது அனைத்தையும் அதன் பிறப்பிற்குப் பின் கொடுக்கின்றாள் .இதனால் முக்கியமானது சேய் தாய்ப்பால் பெறுவது .
அதைவிட முக்கியமானது தாய் தனதுசேய்க்கு பால் ஊட்டுவது .
தாய் மொழி எவ்வளவு சிறந்தது என நாம் அனைவருக்கும் தெரியும்.சொல் வழி மொழி தன் மகவுக்கு தனது அனைத்தையும் அதன் பிறப்பிற்குப் பின் கொடுக்கின்றாது.இதனால் முக்கியமானது சேய் தாய் மொழி பெறுவது .
அதைவிட முக்கியமானது தாய் தனதுமொழியில் அறிவூட்டுவது .

தாய் தன் மகவிற்கு வாயால் ஊட்டும் பால் மட்டுமே உயர்ந்த,சிறந்த ஆரோக்கியத்தை தரும்.
மொழி தன் மகவிற்கு வாயால் ஊட்டும் சொல் மட்டுமே உயர்ந்த,சிறந்த அறிவைத் தரும் .

தாயிடமிருந்து அனைத்தையும் சேய் பெறுகிறது .இதில் சிறந்தது தாயின் முலைப்பால்.
கல்வியிலிருந்து தன் பிறப்பிற்குப் பின் உயர்ந்த விசயங்களை ஒருவர் பெறுகின்றார்.
இதில் சிறந்தது தாய்மொழியில் கல்வி .

வாயால் தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மை சிறப்பாகிறது.
சொல்லால் அறிவுபால்ஊட்டுவதால் மொழி சிறப்பாகிறது .

முலையின் பயன் -தாய்மை.
சொல்லின் பயன் -வாய்மை.

தாய்மை என்பது பிறப்பின் உயர்வு.
வா
ய்மை என்பது சொல்லின் உயர்வு .

தாய்மையில் பாலூட்டல் தனி சிறப்பு .
வாய்மையில் சொல்லூட்டல் தனி சிறப்பு.



மேற்கண்ட குறளில்

கல்லாதான் முலையிரண்டும் இல்லாதாள் க்கு ஒப்புமை .
கல்வி முலைக்கு
ஒப்புமை .
சொற்காமுறுதல் பெண்காமுற்ற
சொல் பெண்க்கு
சொல்லாக காமுறுதல் பெண்ணாக காமுறுதல்.
காமுறுதல் என்றால் வெளிப்படல்
சொற்களை கல்லாதவன் முலையுள்ள பெண்ணாக இல்லாதவள் என்பதாகிறது .
இங்கு முலை குறியீடு .


சுருக்கமான விளக்கம் .

மலடி குழந்தை பொத்துக்க ஆசைப்பட்டமாதிரி-னு ஒரு பழமொழி உள்ளது அல்லவா அதுவேதான் இதுவும்.
மலடி பெண் என்று வெளிப்படாலும் அவளால் தாய்மை என்னும் உயரிய பண்பை அடைய முடியாது .அதனால் பாலுட்டமுடியாது .
அப்படிப்பட்டவள் ஓரு குழந்தைக்கு பாலூட்டுவது போல் நடிக்க முடியும் அதனால் அவளுக்கும் ஆதாயம் இல்லை குழந்தைக்கும் எதுவுப் பயனில்லை .
கல்வியறிவில்லாமல் ஒன்றைச்சொல்வது மலடி பால் கொடுக்க ஆவல்படுவது போல் . படிப்பறிவில்லாதவனின் எழுத்துக்களால் யாருக்கும் பயனிருக்காது .மொழியும் சேதப்படும் .பயனும் அதற்கில்லை .தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் ஆரோக்கியம் போன்றது கல்லாதவன் சொல்லும் சொல் என்கின்றார் .

வள்ளுவர் காலத்தில் ஆணுக்கு மட்டுமே கல்வி என்ற நிலை இல்லாமல் இருந்ததால் தான்
ஆணுக்கு பொண்ணை உதாரணம் சொல்கிறார் .

கல்வி கற்பது அவசியம் அதுவும் தாய்மொழியில் கல்வி கற்பதே சிறப்பு .மற்ற மொழிகளில் கற்பது
மலடி குழந்தை பொத்துக்க ஆசைப்பட்டமாதிரி என்கிறார் .அதனால் தான் முலையிரண்டும் இல்லாதாள் என்கிறார் .



மேலும் ...


...





வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ... தொடரும் ...






.


Download As PDF

வியாழன், 15 ஜூலை, 2010

ம் என்றால் ...










ம் ம் ...
ம் ம் ம் ...
ம் ...








----------------
----------------



கவிதை எழுதலாம் வாங்கோ.

நிறைய நாளாச்சு கவிதை சொல்லி விளையாடி... வாங்கோ வாங்கோ.எழுதலாம் ! இந்தப் படம் ஏதோ சொல்லுதுதானே...சொல்லுங்கோ !
என
ஹேமா அவர்கள் அழைத்ததில்
படத்தைப் பார்த்ததும் ...
ம் ஆரம்ப ஒலிகளில் ஒன்று .
இது உயிரினங்களின் இயல்பாக உள்ளது என்பதன் குறியீடாகவும்
ஆறு ம்-கள் ஆறாவது அறிவின் வளர்ச்சியின் குறியீடாகவும்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது .
மற்றும்
அடக்குமுறை அதிகாரம்
இரண்டு-ம்
புரட்சியின்
மூன்றா-ம்
வீச்சில் ஒடுங்கு-ம் .

என மனதில் தோன்றிய பல கருக்களுடன்
எழுதப்பட்ட வரிகள் தான் மேலுள்ளவை
அவ்வளவே .





.





.








Download As PDF

புதன், 14 ஜூலை, 2010

கிழியாத ஆடை


-



.




.


.

 


ஓ... ஆடி
தள்ளுபடியில் கிடைக்கும்
கிழியாத ஆடை




.




.


.

Download As PDF

செவ்வாய், 13 ஜூலை, 2010

தாண்டும் நிழல்கள் .


.








நா
மோகத்தில்

சுகப்படும்

தரையில்
சாய்ந்த
கலசமா
ய் ஆடி
பகலில் பொறுக்கிய
கருமை யனைத்தையும்
தலையில் கொட்டி
மாயும்
காலடிகளாய் ஓடும்
பித்தன்
என தாண்டும்
நிழல்கள் .







.






.


Download As PDF

ஞாயிறு, 11 ஜூலை, 2010

சுழிய சூனியம்.

சுழிய
மாய வெளியில்
சுற்றித்திரிந்து

வானவில்லில்
கருமை காண புறப்பட்ட
கவுதாரியின் இச்சை

ஊர்ந்து ஊர்ந்து
ராவுகளின்
ஏகாந்த வெளியில்

உந்தன்
பிம்பம் பிம்பமாய்
சுற்றிப்பார்க்கும்

எங்கும்எங்குமான
என்
சூனியம்

.


.


.

Download As PDF

சனி, 10 ஜூலை, 2010

நட்சத்திரத்திரம்

.

ஒற்றை நட்சத்திரமாய்
ஓராயிரம் ராவுகள்
கழிந்த பின்
ஒவ் வொரு
பின்னக் கூட்டலிலும்
சேகாரமான சோகங்கள்
உள்ளொளி பெற்று
பீச்சி யடித்த
பிண்டங்களினாலான உலகில்
ஊர்ந்து செல்லும் பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் கொடுத்தது
ஒரு நட்சத்திரத்திரம்
ஓர் இரவில்
உன்னால் .


.

.

Download As PDF

வியாழன், 8 ஜூலை, 2010

மற்றவர் குற்றம் ...சேகுவாரா
















“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்-சேகுவாரா .

இதனையும் தமிழ்கூறும் நல்லுலகம்
எதனையும் போலவே
தவறாகவே புரிந்து கொண்டும்
பயன்படுத்தியும் வருவது தான் மிகவும் கவலையளிக்கக்கூடிய விடயமாகும்
சே
தனி மனிதனுக்காகப் பேசியது கிடையாது இது



ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.




இங்கு யாண்டு இவர் கூற வருவதென்னவெனில்
மற்றவர்களை குற்றவாளிகள் போல்
தங்
குற்றத்த்தால் காண்பர் என்றால்
பின் இதைவிட தீது என்பது மூளையில்லாத உயிரினங்களுக்கு வேறு ஏதாவது இருக்கமுடியுமா? என்பதுவே.
.
மன்னும் உயிர் என்பதற்கு அரசாலும் உயிர் என்றும் அர்த்தம் பெறும் .


இதுவும் அதுபோலவே
தனி மனிதனுக்காகப் பேசியது கிடையாது .



.





.

வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .



தொடரும் ....




.



.


Download As PDF

ஞாயிறு, 4 ஜூலை, 2010

தமிழ் இனி மெல்ல ... ? ...பர்போலா ...











.






உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க,
திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும்
"செம்மொழ ி தமிழ்' விருது பெற்ற
பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா

சிந்து உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க
ஒரு தமிழனால் மட்டுமே முடியும்
அதுவும்
ஒரு குறிப்பிட்ட தமிழனால் மட்டுமே இதை படிக்க முடியும் என்ற கருத்தில் அழுத்தம் திருத்தமாக இருந்துவரும் எனக்கு அவரின் இந்தப்பேச்சு மிகவும் சந்தேசத்தைக்கொடுத்தது

நானும் அவ்வெழுத்துக்களை ஆய்ந்து வந்து கொண்டிருக்கின்றேன்
எனது பயணம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இவ்வேலையில் சிந்து ஆய்வாளர்களின் கட்டுரைகள் சில என்னை நகைக்கும்படி செய்தன அப்படிப்பட்ட கட்டுரைகள் வெளிவந்த வேதனையான நேரங்களில் என்னுள் நான் சொல்லிக்கொள்ளும் வார்த்தை அவர் தமிழனில்லை அதனால் அவரால் அவ்வளவுதான் அதில் சிந்திக்க முடியும் அதற்காக அவரையே அவரின் ஆய்வையோ குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை இதுவும் ஏதாவது ஒரு வகையில் உதவும் ஆதலால் வரவேற்போம் என்பதே

பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களின் இப்பேச்சு ஒரு நல்ல ஆராய்ச்சியாளர் சிந்து ஆய்வில் தனது முகட்டை தொட்டுவிட்டதையே காட்டுவதாக நான் உணர்கின்றேன் அதை அவர் சரியாகவே செய்திருப்பார் என்றே நினைக்கின்றேன்

மொழியாற்றல் மிக்க பேச்சாளராலோ
வாய்ச்சவடால் விடும் சந்தர்ப்பவாத தமிழ்வாதிகளாலோ
சும்மா நிகழ்வில் வாழும் தமிழ் பொய்யர்களாலோ
சூழலுக்கு ஏற்ப தமிழ் தமிழன் தமிழினம் என்று கோசமிடும் வேடதாரிகளாலோ
எப்பொழுதும் தமிழனின் அடிச்சுவட்டை சாதாரமணமாகக்கூட அறியமுடியாது
அப்படிப்பட்ட அவர்களால் என்றும் பயனில்லை

இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தல் என்னும் அவரின் கூற்றிலிருந்து மொழியின் தொன்மையை அறித்து வைத்திருத்தலின் முக்கியத்துவத்தையும் ...




.............


அனைத்தையும் சந்தேகப்படு -3
தொடரும் .........

.


.






.




.


.




. Download As PDF

வெள்ளி, 2 ஜூலை, 2010

இரவல் கனவுகள்

. .





.



.








இரவல் கனவுகள்
இரண்டு வாங்கினேன்
தேவதைக்கு ஒன்று














-------------










உயிரின் இதம்
உடலின் இசை
உயிர்ப்பின் ஓசை

















--------------








.






.


.
Download As PDF

வியாழன், 1 ஜூலை, 2010

பிழை பிம்பங்கள்

















.


.





தொங்கும்
மோனாலி சா வாய்.
நாட்காட்டி .








--------------




வழிகாட்டும் ...
துருவ நட்சத்திரம் .
விடியல் ?









--------------



வலி ...
வலியாக .
பிழை பிம்பங்கள்.







---------------





.




.






.




.
Download As PDF